உஜ்சயினி மாகாளியம்மன் கோயில் முளைப்பாரி விழா
பரமக்குடி : பரமக்குடி மாதவன் நகரில் உஜ்சயினி மாகாளியம்மன் கோயில் முதலாம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது.இக்கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அம்மன் முகம் வைத்த ஏராளமான முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி என ஆடி மகிழ்ந்தனர்.முளைப்பாரிகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் கரைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நகராட்சி கவுன்சிலர் வடமலையான் செய்திருந்தார். விழாவில் நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா பங்கேற்றனர்.