உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணியில் பயன்பாடு இல்லாத சுகாதார வளாகங்கள்

திருப்புல்லாணியில் பயன்பாடு இல்லாத சுகாதார வளாகங்கள்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மகளிர் சுகாதார வளாகங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டியுள்ளதால் அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளது.திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாக கட்டடம் அமைந்துள்ளது. 5 முதல் 10 எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட கழிப்பறை வளாகங்களில் பயன்பாடு இன்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.கடந்த 2011ல் கட்டப்பட்ட பொதுமக்கள் சமுதாய கழிப்பறை கட்டடம் பெருவாரியான கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்டு பயன்படாததால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.மகளிர் சுகாதார வளாகங்களை பழுது நீக்கம் செய்வதற்காக அரசு நிதி ரூ.2 லட்சம் வரை ஒதுக்கப்பட்டு பொதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. இருப்பினும் அவற்றில் தண்ணீர் மின்சார மோட்டார் உள்ளிட்ட வசதிகள் இன்றி காட்சி பொருளாகவே உள்ளன. பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு பூட்டியே வைத்துள்ளனர்.எனவே பூட்டியுள்ள கழிப்பறை வளாகங்களைதிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ