மேலும் செய்திகள்
சேதமடைந்த இரும்பு பிளேட் புதுப்பிப்பு
5 minutes ago
இ--சேவை மையத்தில் அங்கன்வாடி
7 minutes ago
கியூ ஆர் கோடு வாயிலாக அரசு பஸ்களில் டிக்கட்
13 minutes ago
நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா
14 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் வாழும் பழந்தின்னி வவ்வால்கள் இறந்து தண்ணீரில் மிதக்கின்றன. அவற்றை அகற்றி, இறப்பிற்கான காரணங்களை கண்டறிந்து வவ்வால்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேணடும். மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால் கிராமப்பகுதிகளில் காணப்படுகின்றன. வவ்வால்களை மருத்துவ குண மிக்கதாக கருதி சிலர் வேட்டையாடுகின்றனர். இதன் விளைவாக தற்போது பழந்தின்னி வவ்வால்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அவற்றை காண்பதே அரிதாகி வருகிறது. அதே சமயம்ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மரங்களுக்கு மத்தியில் தேங்கியுள்ள தண்ணீரில் வவ்வால்கள் செத்து மிதக்கின்றன. துர்நாற்றம் வீசுவதால் அவற்றை அகற்ற வேண்டும். மேலும் இறப்பிற்கான காரணங்களை கண்டறிந்துஅழிந்து வரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்க வனத்துறை முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
5 minutes ago
7 minutes ago
13 minutes ago
14 minutes ago