உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இருள் சூழ்ந்த ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்

 இருள் சூழ்ந்த ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு பழுது காரணமாக இருள் சூழ்ந்துள்ளதால் இரவில் பஸ் ஸ்டாண்ட் வரும் பெண் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனந்துார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக விளங்குவதால் அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் வகையில் பஸ் போக்குவரத்து உள்ளதாலும், தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு உயர் கோபுர மின் விளக்கு (ஹைமாஸ் விளக்கு) 2 மாதத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்ட் மையத்தில் அமைந்துள்ள மின் விளக்குகள் அரைக்கம்பத்தில் தொங்கிய வண்ணம் உள்ளன. கம்பத்தில் உள்ள விளக்குகளில் ஒரு விளக்கு மட்டுமே வெளிச்சம் தருகின்றன. மற்ற விளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் பஸ் ஸ்டாண்டின் பெரும்பாலான பகுதிகள் இருள் சூழ்ந்துள்ளன. இதனால் இரவில் வரும் பெண் பயணிகளும் குழந்தைகளும் அச்சத்துடன் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்