மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்கும் உத்தரகோசமங்கை பள்ளி மாணவர்கள்
உத்தரகோசமங்கை : - பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்தப்பட்டது. அதில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகினர்.இவர்கள் ஜன.,24 முதல் திருநெல்வேலியில் நடக்கும் மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்கின்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 100 மீ., பிரிவில் ரோகித் சர்மா இரண்டாமிடம், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் காளீஸ் மாதவன், சிவதர்ஷன், கவின் நாத், கவுதம், வெங்கடேஷ் உள்ளிட்ட மாணவர்கள் முறையே முதல் மற்றும் மூன்றாம் இடங்களும், 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ரோகித் அஸ்வா, ரித்தீஷ், ஜெயமணிகண்டன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராணி மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மங்கள பேபி, மதியழகன், முத்துடையார், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், மகாலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.