| ADDED : டிச 27, 2025 05:33 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ., சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் சவுந்தர பாண்டியன், ஒன்றியத் தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தனர். விழாவில் பொதுமக் களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் சசிகனி, அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் ரகுபதி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செல்லத்துரை, சந்திரசேகர், பொருளாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். *திருவாடானை சன்னதி தெரு நான்கு ரோடு சந்திப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா பா.ஜ., சார்பில் கொண்டாடப்பட்டது. வாஜ்பாய் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஏராளமான பா.ஜ., தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு செய்திருந்தார். *முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., ஒன்றிய தலைவர்கள் மோகன்தாஸ், சேதுராமலிங்கம் முன்னிலையில் வாஜ்பாய் படத்திற்கு மலர்மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடி னர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்திய விவசாய பொருள் விற்பனைக் குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பார்வையாளர் சேதுராமு, மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் ஐயப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.