உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை

பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ராப்பத்து விழாவில் வேடு பறி லீலை உற்ஸவம் நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, டிச.13 முதல் பகல் பத்து உற்ஸவம் துவங்கி டிச.22 துவங்கி ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. இதன் எட்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கையாழ்வார், திருமாலுக்கு கோயில் கட்ட எண்ணி வறுமை கொண்டார். தொடர்ந்து அரங்கனின் கோயில் கட்ட திருடனாக மாறினார். அப்போது பெருமாள் தாயாருடன் திருமண கோலத்தில் எழுந்தருளி திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தார்.இந்த பறி லீலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் ராப்பத்து உற்ஸவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ