உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டிச.30ல் ராமேஸ்வரத்தில் காசி தமிழ் சங்கமம் விழா துணை ஜனாதிபதி பங்கேற்பு

 டிச.30ல் ராமேஸ்வரத்தில் காசி தமிழ் சங்கமம் விழா துணை ஜனாதிபதி பங்கேற்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் டிச., 30ல் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு, உ.பி., வாரணாசி இடையே பழமையான ஆன்மிகம், பண்பாடு, கலாசாரத்தை புதுப்பிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாட்டில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022ல் துவங்கியது. 4ம் ஆண்டாக டிச.,2ல் காசி தமிழ் சங்கமம் விழா வாரணாசியில் துவங்கியது. விழாவில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா டிச.,30ல் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் ஹிந்து சமய அறநிலையத் துறை தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் அன்று மதியம் 2:10 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். பின் அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 3:20 மணிக்கு மண்டபம் வருகிறார். மதியம் 3:40 மணிக்கு விழா நடக்கும் மேடைக்கு வருகிறார். விழா முடிந்ததும் மாலை 5:00 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். விழாவில் தமிழக கவர்னர் ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார்நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ