உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்விளக்குகள் பழுதால் ராமேஸ்வரம் அருகே இருளில் மூழ்கிய கிராமம்

மின்விளக்குகள் பழுதால் ராமேஸ்வரம் அருகே இருளில் மூழ்கிய கிராமம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி கிராமத்தில் மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கி கிடப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யம்புளி கிராமத்தில் 300க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமம் நுழைவில் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை முதல் கிராமத்திற்குள் செல்லும் சாலை வரை ஊராட்சியின் மின்விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகள் சில நாட்களுக்கு முன்பு பழுதாகி எரியாமல் உள்ளன. இதனால் கிராம பஸ் ஸ்டாப் முதல் கிராமத்திற்குள் செல்லும் சாலை வரை இருளில் மூழ்கி கிடப்பதால் பாம்புகள், விஷ வண்டுகள் உலா வருவதால் மக்களுக்கு விபத்து அச்சத்தில் உள்ளனர். எனவே பழுதான மின் விளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் பொருத்தி இருளில் மூழ்கும் கிராமத்தை ஒளிர செய்ய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை