| ADDED : மார் 20, 2024 12:16 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கான விழிப்புணர்வுஏற்படுத்துவதற்கான பிரசார வாகனத்தைகலெக்டர் விஷ்ணுசந்திரன் துவங்கி வைத்தார்.ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வரும் வாகனங்களில் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து பேனர், ஒலி பெருக்கிகள் பிரசாரம் நடக்கிறது. இதற்குரிய வாகனங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் துவங்கி வைத்தார்.மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர்கள் விழிப்புணர்வு கோலப்போட்டியினை கலெக்டர் பார்வையிட்டார்.இந் நிகழ்ச்சிகளில் கோவிந்தராஜூலு டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர் வளர்ச்சி வீர் பிரதாப் சிங், பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், மகளிர் திட்ட அலுவலர் செய்யது சுலைமான், ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் பங்கேற்றனர்.-------