உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாட்கோ திட்டத்தில் நலத்திட்ட உதவி

தாட்கோ திட்டத்தில் நலத்திட்ட உதவி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் தொழில்முனைவு திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் 3 பேருக்கு சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.33 லட்சத்து 19 ஆயிரம் திட்டத்தொகையில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் மானியமாக வழங்கினார்.இதே போல் மாவட்டத்தில் 2024--25ம் நிதியாண்டில் 24 பேருக்கு ரூ.2 கோடியே 2 லட்சத்து 56 ஆயிரத்து 516 திட்டத்தொகையில் மானியமாக ரூ.66 லட்சத்து 14 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை