மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
4 hour(s) ago
கமுதி : கமுதி அருகே த.புனவாசல், அ.தரைக்குடி கிராமத்தில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி அருகே வல்லந்தை, டி.வல்லக்குளம், த.புனவாசல், அ.தரைக்குடி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800 ஏக்கருக்கும் அதிகமாக நெற்பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழையால் மழைநீர் செல்ல வழியின்றி விவசாய நிலங்களில் தேங்கி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.இதனால் விவசாயிகள் கூடுதல் பணம் செலவு செய்து மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்றி வந்தனர். கமுதி அருகே த.புனவாசல், அ.தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நன்கு வளர்ந்துள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது.விளைச்சல் நிலையில் நெற்பயிர்கள் அழிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல், கடலை, சிறுதானியப் பயிர்களை காட்டுப்பன்றிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago