உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி

டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவர் முருகேசனுடன் நேற்று காலை ஊரிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ