உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விறகு வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஆர்வம்

விறகு வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஆர்வம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விறகு வெட்டும் தொழிலில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பெரும்பாலான தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. இந்நிலையில் தங்களது பட்டா இடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தொழிலாளர்கள் விறகுகளாக வெட்டி விற்பனை செய்கின்றனர்.தற்போது ஒரு டன் சீமைக்கருவேல மரம் விறகு ரூ.3500 முதல் ரூ.3800 வரை விற்பனை ஆவதால் இத்தொழிலில் தொழிலாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும் விறகுகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கி விற்பனை செய்வதில் வருமானத்திற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.நேரடியாக விறகுகளை விற்பனை செய்வதில் உடனுக்குடன் வருமானம் கிடைத்து வருவதால் நேரடியாக விறகுகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை