உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முத்தாலம்மனுக்கு மஞ்சள் நீராட்டு

முத்தாலம்மனுக்கு மஞ்சள் நீராட்டு

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் கிழமையையொட்டி மஞ்சள் நீராட்டு விழா நடப்பது வழக்கம். நேற்று சக்தி மகளிர் குழு சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் நீர் நிரப்பிய குடங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து சன்னதியை அடைந்து மூலவருக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பால், பன்னீர், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது மகளிர் குழுவினர் சக்தி கோஷம் முழங்க, பஜனை பாடல்கள் பாடி, கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் மூலவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி