உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாடானை: திருவாடானை தீயணைப்புத்துறையினர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் திருவாடானை, தொண்டி, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைக்கான புல வரைபடம், ரோடு வசதி, சுற்றுப்புற தன்மை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும். பட்டாசு இருப்பு வைக்கும் இடத்தில் குடியிருப்புகளோ, பள்ளியோ, வழிபாட்டு தலமோ அருகில் இருக்கக் கூடாது. உயர் மின் அழுத்த கம்பி வழித்தடம், எளிதில் தீப்பற்றும் பொருள் உள்ள பகுதியாக இருக்க கூடாது. இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் இ-சலான் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ