உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தனியார் பஸ் - டூவீலர் மோதி இளைஞர் பலி

 தனியார் பஸ் - டூவீலர் மோதி இளைஞர் பலி

இருவர் படுகாயம்பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி நெடுஞ்சாலையில் டூவீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார். பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி காலனியைச் சேர்ந்த, நகராட்சி துாய்மை பணியாளர் பாண்டி மகன் சபரிவாசன் 21. கூலி வேலை செய்து வந்தார். சபரிவாசன், நண்பர் சக்தி உள்ளிட்ட மூவர் ஒரே டூவீலரில் பரமக்குடியில் இருந்து மணிநகர் நோக்கி சென்றனர். (ஹெல்மெட் அணியவில்லை) முத்தையா கோயில் பகுதி நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு நண்பர்களும் பலத்த காயமடைந்து, பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி