உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் மீது பஸ் மோதிய  விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் மீது பஸ் மோதிய  விபத்தில் இளைஞர் பலி

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் டூவீலர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் இளைஞர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு தெருவை சேர்ந்த ஆண்டி காளிமுத்து மகன் பசுபதி 30. குறத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் மகன் கவியரசன். இவர்கள் இருவரும் டூவீலரில் கேணிக்கரை சந்திப்பில் இருந்து நேற்று முன் தினம் இரவு 7:50 மணிக்குபேராவூர் நோக்கி சென்றனர்.பசுபதி டூவீலரை ஓட்டினார். பேராவூர்ரைஸ் மில் அருகே அதே வழியாக வந்த ஆம்னி பஸ் டூவீலரின் பக்கவாட்டில் மோதியது. இதில் பசுபதி, கவியரசன்காயமடைந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில்பசுபதி இறந்தார். கவியரசன் காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.கேணிக்கரை போலீசார் ஆம்னி பஸ் டிரைவர் உச்சிப்புளி மலைராஜன் மகன் சுரேந்திரன் 38, என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான பசுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை