உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

அரக்கோணம்,:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் விநாயகம் மகள் பவித்ரா, 5, ராஜேஷ் மகன் குணா, 5. இருவரும், அதே பகுதி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தனர்.நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த குணா, பவித்ராவுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் கிராமம் அருகே, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்த மீன் குட்டையில் விளையாட சென்றனர்.நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், குட்டையில், 3.5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது.இந்த தண்ணீரில் பவித்ரா, குணா இருவரும் விளையாடிய போது தண்ணீரில் மூழ்கினர்.குழந்தைகள் வீட்டிற்கு வராததால், பெற்றோர் தேடிய நிலையில், மீன் குட்டையில் இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை