உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ராணிப்பேட்டையில் பலத்த மழை 200 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

ராணிப்பேட்டையில் பலத்த மழை 200 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. இதனால், கலவை, மாம்பாக்கம், பென்னகர், குப்படி சாத்தம், சொரையூர், வாழப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில், 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் பயிர்கள் நீரில் மூழ்கிஉள்ளன. இப்பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை வாயிலாக கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால், நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, மழை நீர் சாலையில் தேங்கி, குடியிருப்புக்குள் புகுந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று வெண்மணி பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.போளூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி