உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது

தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சேட்டு, 39. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் அவரை, அப்பகுதியை சேர்ந்த வீரமணி, 22, ஈசாக், 20, ராஜேஷ், 35, ராமதாஸ், 41, மற்றும் ராமச்சந்திரன், 44, ஆகிய, 5 பேர் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த சேட்டுவை, 5 பேரும் சேர்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து, வீரமணி உள்ளிட்ட, 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்