மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே ரயிலில் புகை
17 hour(s) ago
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
24-Sep-2025
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
22-Sep-2025
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
13-Sep-2025
அரக்கோணம்:கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழையால், அங்குள்ள சில மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு பருவ மழை முன் எச்சரிக்கை மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் தலைமையில் 7 குழுக்கள் நேற்று தனித்தனி வாகனங்கள் மூலம் புறப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும், 30 பேர் வீதம், 210 வீரர்கள் மருத்துவ முதலுதவி சிகிச்சை சாதனங்கள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள் உட்பட அதிநவீன மீட்புப் கருவிகளுடன் மீட்புப் படை வாகனத்தில் சென்றனர்.
17 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025
13-Sep-2025