உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சண்டையில் நடந்த விபரீதம் கத்தியால் குத்தியவர் கைது

சண்டையில் நடந்த விபரீதம் கத்தியால் குத்தியவர் கைது

நெமிலி:நெமிலி அடுத்த, கீழ் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 48; கூலித்தொழிலாளி. அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 40, தனியார் பள்ளி வேன் ஓட்டுனர். விநாயகத்திற்கும், சரவணனுக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இது, கைகலப்பாக மாறியது.சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, விநாயகத்தின் மர்ம உறுப்பு மீது குத்தி உள்ளார். நெமிலி போலீசார் காயமடைந்தவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி