உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / 50 சவரன் ரூ.2 லட்சம் கொள்ளை

50 சவரன் ரூ.2 லட்சம் கொள்ளை

அரக்கோணம்:அரக்கோணம் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து, 50 சவரன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர், முன்னாள் ராணுவ வீரர் மதியழகன், 65. இவரது மனைவி அமுதா, 60. இவர்களது மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். மதியழகனின் தாய் பார்வதியம்மாளுக்கு உடல்நிலை பாதித்ததால், சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடந்த, 2 நாட்களுக்கு முன் அழைத்து சென்றனர். நேற்று காலை, 7:00 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 50 சவரன், 2 லட்சம் ரூபாய், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை