உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / பெருஞ்காஞ்சி ஏரிக்கரையில் விபத்து அபாயம்

பெருஞ்காஞ்சி ஏரிக்கரையில் விபத்து அபாயம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து வாலாஜா செல்லும் நெடுஞ்சாலையில், பெருங்காஞ்சியில் ஏரிக்கரை மீதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலுார், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. பல்வேறு திருப்பங்களுடன் குறுகலாக அமைந்துள்ள இந்த சாலையில், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாதுகாப்பு கருதி, சாலையோரத்தில் இரும்பு தடுப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் நடப்பட்டுள்ளன. ஆனால், சீரான பராமரிப்பு இல்லாததால், இந்த எச்சரிக்கை பதாகைகள் புதரில் மறைந்துள்ளன. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை குறுகியுள்ளதால் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும் இருசக்கர வாகனஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இந்த சாலையை சீரான இடைவெளியில் முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை