மேலும் செய்திகள்
நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை
04-Jul-2025
திமிரி : நரிக்குறவர்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினரை கண்டித்து மறியல் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில், 80 நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் உணவுக்காக வயல் வெளிகளில் பறவைகள், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுகின்றனர். கடந்த வாரம் முயல் வேட்டையாடியதற்காக, 35,000 ரூபாய் அபராதம் விதித்து, திமிரி வனத்துறையினர் வசூலித்தனர். நேற்று வனத்துறையினர் சாதாரண உடையில் முயல், பறவைகளை வாங்குவது போல் நரிக்குறவர்களிடம் விசாரித்தவாறு சென்று, அவர்களிடம் வேட்டையாடப்பட்ட முயல், பறவைகள் இருப்பதை கண்டு, கைது செய்யப்போவதாக மிரட்டினர். ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள், வனத்துறையினரை கண்டித்து திமிரி - கலவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திமிரி போலீசார் சென்று, விசாரணை நடத்திக் கொண்டிருந்போது, அங்கிருந்து வனத்துறையினர் 'எஸ்கேப்' ஆகினர். இதையடுத்து, நரிக்குறவர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.
04-Jul-2025