மேலும் செய்திகள்
சோளிங்கரில் இன்று துவங்கும் மணவாள மாமுனி உற்சவம்
27-Oct-2024
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். நரசிம்ம சுவாமி யோக நிலையில் இங்கு அருள்பாலித்து வருகிறார். யோக நிலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களின் வேண்டுதலை, அனுமன் கேட்டு நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.தவ நிலையில் உள்ள யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அருள்பாலிக்கிறார்.இதனால், கார்த்திகை மாதத்தில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.கடந்த 17 ம் தேதி துவங்கிய கார்த்திகை உற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு உற்சவம் நடந்தது.மலைக்கோவில் மற்றும் உற்சவர் அருள்பாலிக்கும் பக்தோசித பெருமாள் கோவிலிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பக்தோசித பெருமாள், உள்புறப்பாடு எழுந்தருளினார்.
27-Oct-2024