உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மொபைல் போன் பறித்தவர் கைது

மொபைல் போன் பறித்தவர் கைது

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த, செய்யூரைச் சேர்ந்தவர் தீபத் ராஜ், 20; இவர், கடந்த மாதம், 28ம் தேதி இரவு, மோசூர் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் நின்று உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, தீபத் ராஜின் மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை பறித்து சென்றவரை தேடி வந்தனர்.அப்போது மோசூர் ரயில் நிலையத்தில் மொபைல் போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மோசூர் ஜடேரி பகுதியைச் சேர்ந்த பொன்மணி, 29, என்பது தெரிய வந்தது.இதையடுத்து பொன்மணியை கைது செய்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ