| ADDED : அக் 06, 2011 02:17 AM
சேலம்: சேலத்தில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ரோடுகளில் திருஷ்டி
பூசணிக்காய் உடைக்க போலீஸ் கமிஷனர் தடை உத்தரவு பிறப்பித்து இருந்த
நிலையில், களரம்பட்டி பகுதியில் திருஷ்டி பூசணிக்காயால் ஏற்பட்ட விபத்தில்,
ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தார்.சேலம், களரம்பட்டி ஆஸ்பத்திரியான் காட்டை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது
பேத்தி நந்தினி(13). மாரியப்பன் மொபட்டில் பேத்தியை ஏற்றிக் கொண்டு, பழைய
பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்துள்ளார்.களரம்பட்டி மூன்றாவது சந்தில் வந்த போது, ரோட்டில் உடைத்துக் கிடந்த
திருஷ்டி பூசணிக்காய் மீது மொபட் ஏறி உள்ளது. இதில், நிலை தடுமாறியதில்,
இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ரோட்டில் விழுந்த நந்தினி மீது, குப்பை
அள்ளுவதற்காக வந்த மாநகராட்சி டிராக்டரின் பின் பக்க டயர்கள் ஏறியது.இந்த விபத்தில், நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த
விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,
சம்பத்குமார், செல்லப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது ரோட்டில் திருஷ்டி பூசணிக்காய்
உடைத்ததால் ஏற்பட்ட விபத்துக்களில் மட்டும், 22 பேர் காயம் அடைந்து, அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ரோட்டில் திருஷ்டி பூசணிக்காயை உடைப்பதற்கு
கமிஷனர் சொக்கலிங்கம் தடை விதித்த போதும், நேற்று அதிக அளவில் ரோடுகளில்
திருஷ்டி பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டு இருந்தது.