உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியரிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியர் கைது

மாணவியரிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியர் கைது

சேலம்,:சேலம் மாவட்டம், ஏற்காடு, அடிவாரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 59. இவர், சேலம் அருகே சின்ன சீரகாபாடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர், சில மாணவியரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சில மாணவியர், பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, 'சைல்ட் ஹெல்ப் லைன்' எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்து கல்வித்துறை அதிகாரிகள் தகவல்படி, டவுன் மகளிர் போலீசார் விசாரித்து, சுப்ரமணி மீது நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
ஜன 21, 2025 18:51

கடைசி நல்ல டிஸ்மிஸ் செய்வார்கள் இப்பொழுது கடைசி ஆண்டுகளில் தூக்குகிறார்கள் என்று சொல்வதா ? இதனால் அந்த மனுஷனுக்கு தான் அலைச்சல். பல ஆண்டுகளாக எத்தனை மாணவிகள் மனக்கஷ்டம் பட்டிருப்பார்கள். அப்போது அரசு கண்காணிக்கவில்லை. சட்டம் நல்லது செய்ய வேண்டுமே தவிர பழிதீர்க்கக்கூடாது


முக்கிய வீடியோ