உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைதுமேட்டூர்,:மேட்டூர், பாரதி நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 25. கோவையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். பொங்கல் விடுமுறையால் சொந்த ஊர் வந்தார். கடந்த, 14 இரவு, 7:30 மணிக்கு, நவீன்குமார், அவரது நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த அஜீம், வீகன் ஆகியோர், பாரதி நகரில் மேடை அமைத்து சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தினர். அப்போது அங்கு வந்த மேட்டூர் வி.பி.கே., நகரை சேர்ந்த, 18 வயது சிறுவன், சுதீப்ராஜ், 20, பொன்னகரை சேர்ந்த, 3 சிறுவர்கள், மூப்பனார் நகர் ரோகித்குமார், 20, பாரதி நகர் சுஜய், 20, ஆகியோருக்கும், நவீன்குமார் உள்பட, 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 7 பேரும், நவீன்குமார் உள்பட, 3 பேரை தாக்கினர். காயம் அடைந்த மூவரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகார்படி நேற்று முன்தினம், 7 பேரையும் மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை