உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாசிபெரியண்ணன், கருப்பண்ணன் கோவில்களில் கும்பாபிேஷகம்

மாசிபெரியண்ணன், கருப்பண்ணன் கோவில்களில் கும்பாபிேஷகம்

கெங்கவல்லி: ஆணையாம்பட்டியில் உள்ள மாசிபெரியண்ணன், கருப்பண்ண சுவாமி கோவில்களில் நேற்று, கும்பாபி ேஷக விழா நடந்தது.கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, சுவேத நதியின் தென்கரையில் மாசிபெரியண்ணன், கருப்பண்ண சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த, 25ல், கணபதி ேஹாமத்துடன் கும்பாபி ேஷக விழா துவங்கியது. நேற்று மாசி பெரியண்ணன், கருப்பண்ணசாமி, நாச்சியாயி அம்மன், காமாட்சியம்மன், மதுரை வீரன், புளியங்குறிச்சான், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை செய்தனர். பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரில் பூஜை செய்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசம் மற்றும் சுவாமி மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ