உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குட்கா கடத்தலை தடுக்க சிறப்பு குழு அமைப்பு

குட்கா கடத்தலை தடுக்க சிறப்பு குழு அமைப்பு

'குட்கா கடத்தலை தடுக்க சிறப்பு குழு அமைப்பு'ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சிறப்பு எஸ்.ஐ., பிரபாகரன், எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற உள்ளார். இதுகுறித்து ஆவணங்களை பார்வையிட, எஸ்.பி., கவுதம்கோயல் நேற்று, ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது ஸ்டேஷனில் உள்ள வழக்கு விபரங்களை, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து எஸ்.பி., கூறுகையில், ''ஓமலுார் ஸ்டேஷனுக்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார். குட்கா கடத்தலை தடுக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொப்பூர் செக் - போஸ்டில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி