உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் பராமரிப்புக்கு ஆள் இல்லைசேசன்சாவடி மக்கள் பாதிப்பு

மின் பராமரிப்புக்கு ஆள் இல்லைசேசன்சாவடி மக்கள் பாதிப்பு

மின் பராமரிப்புக்கு ஆள் இல்லைசேசன்சாவடி மக்கள் பாதிப்புவாழப்பாடி,:வாழப்பாடி அருகே கிழக்கு மின் கோட்டத்துக்கு உட்பட்டு, சேசன்சாவடி பிரிவு அலுவலகம் உள்ளது. அதன் கட்டுப்பாட்டில், 4,000 குறைவழுத்த மின் இணைப்பு, 9 உயரழுத்த இணைப்பு, 13 தொழில் மின் இணைப்புகள் உள்ளன. அங்கு பழுதுகளை சரிசெய்ய, பராமரிப்பு மேற்கொள்ள, 3 ஒயர்மேன் பணியிடங்கள் உள்ளன.ஒரு பணியிடம், ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளது. மற்ற இருவர், பதவி உயர்வில் சென்றனர். இதனால் சேசன்சாவடி பிரிவு அலுவலகத்தில், 2 மாதங்களுக்கு மேலாக, ஒயர்மேன் இல்லாததால், மின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பீக் ஹவர்ஸில் மின் அழுத்தம் அதிகமாகி, 'பிரேக் டவுன்' ஆவதால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதை நிவர்த்தி செய்ய, மின்மாற்றியில், 'பீஸ் ஒயர்' பொருத்த, உடனுக்குடன் மின்தடை களைவது உள்ளிட்டவை கேள்விக்குறியாக உள்ளது. வீட்டு மின் இணைப்பு, மில், தொழில் நிறுவனங்களில் ஏற்படும் மின்தடைகளை களைவதிலும் தாமதமாகின்றன. அதனால் அறிவிக்கப்படாத மின்தடை காலம், சேசன்சாவடியில் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன்(பொ) கூறுகையில், ''வாழப்பாடியில் இருந்து ஒரு ஒயர்மேனுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளாதல், அவர் விரைவில் சேசன்சாவடியில் பொறுப்பேற்க உள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை