உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரைசேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதில் பலர், அம்மன் சன்னதி, தட்சிணாமூர்த்தி, முருகன், விநாயகர், நவக்கிரகங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.அதற்கு வீடுகளில் இருந்து தீப எண்ணெயை எடுத்து வந்தோ, கோவில் முன் விற்கப்படும் அகல் விளக்குகளை வாங்கியோ ஏற்றி வழிபடுகின்றனர்.பல்வேறு வித எண்ணெய் தீபங்களால் கோவில் சுவர்கள், பழமையான சிற்பங்கள், கருவறை சிலைகள் மீது கரி படிந்து அழுக்கு ஏற்படுகிறது. இதை தடுக்க அறநிலையத்துறை கோவில்களில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சுகவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அதில், கடந்த, 1 முதல் பக்தர்கள், சுத்தமான நெய் தீபம் மட்டும் ஏற்றி வழிபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி