மேலும் செய்திகள்
சேலத்தில்குடிநீர் கேட்டுமறியல் போராட்டம்
08-Apr-2025
அம்பேத்கர் பிறந்தநாள் பேனர் கிழிப்புஆத்துார் பிரதான சாலையில் மறியல்நாமகிரிப்பேட்டை:அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால், இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் சார்பில் அம்பேத்கர் படத்துடன் பிறந்தநாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, பிறந்தநாள் கொண்டாட வந்த பொதுமக்கள், அம்பேத்கர் பேனர் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, அம்பேத்கரின் பேனரை கிழித்த நபர்களை, உடனடியாக கைது செய்யக்கோரி, 50க்கு மேற்பட்டோர், ஆத்துார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மங்களபரம் போலீசார், சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசாருக்கும், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.பொதுமக்கள் அளித்த புகார்படி, மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பேனரை கிழித்தவரை தேடி வருகின்றனர். திடீரென நடந்த சாலை மறியலால், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
08-Apr-2025