உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஊராட்சி குப்பாண்டிபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு அமைக்கப்பட்ட சாக்கடை, அ.புதுார் சாலை வரை சென்று, கழிவுநீர் தேங்கி நிற்கும். ஆனால் இரு மாதங்களுக்கு முன், சிலர் சாக்கடையை மண் கொட்டி அடைத்துவிட்டனர். இதனால் கழிவு நீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதி அருகே தேங்கி நின்றது. இதுகுறித்து மக்கள், அதிகாரிகளிடம் தெரிவித்து, இரு மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை, 10:20 மணிக்கு, மகுடஞ்சாவடி - -இடைப்பாடி பிரதான சாலையில், பத்திரப்பதிவு அலுவலகம் அருகே, 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி, கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை