மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
13-Jan-2025
குரங்கு கடித்து சிறுவன் காயம்ஆத்துார்,: தைப்பூசத்தையொட்டி ஆத்துார் அடுத்த வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலுக்கு, நேற்று, காட்டுக்கோட்டையை சேர்ந்த, பள்ளி மாணவர் மவுலீஸ்வரன், 11, பெற்றோருடன் வந்தார். அவன் வைத்திருந்த தின்பண்டத்தை பார்த்த குரங்குகள் பிடுங்க முயன்றன. சிறுவன் தின்பண்டத்தை விடவில்லை. இதில் ஒரு குரங்கு, சிறுவனின் வலது கையில் கடித்தது. உடனே தின்பண்டத்தை போட்டு, சிறுவன் கதறி அழுதான். குரங்குகள், தின்பண்டத்தை எடுத்து ஓடிவிட்டன. காயம் அடைந்த மவுலீஸ்வரனை, பெற்றோர், காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
13-Jan-2025