உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இழுவை திறனின்றி நின்ற பஸ்பயணிகள் தள்ளிச்சென்ற அவலம்

இழுவை திறனின்றி நின்ற பஸ்பயணிகள் தள்ளிச்சென்ற அவலம்

இழுவை திறனின்றி நின்ற பஸ்பயணிகள் தள்ளிச்சென்ற அவலம்பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, கல்வராயன் மலைத் தொடரான கருமந்துறை பகுதிக்கு ஆத்துார், வாழப்பாடி, சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதியம் ஆத்துாரில் இருந்து, கருமந்துறை நோக்கி சென்ற அரசு பஸ், மேடான பகுதியில் மேல் நோக்கி செல்லாமல், போதிய இழுவைத்திறன் இன்றி சாலையில் நின்றது. நீண்ட நேரமாகியும், மேல் நோக்கி செல்லாமல் திணறியதால் பஸ்சில் பயணித்த பயணிகள், கீழே இறங்கி பின்பக்கத்தில் இருந்து சிறிது துாரம் தள்ளி சென்றனர். ஒரு சிலர் கீழே இறங்கி நீண்ட துாரம் நடந்து சென்றனர். மலைப்பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், முறையாக பராமரிக்கப்படாததால் இழுவை திறன் இல்லாமல் அடிக்கடி நிற்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை