உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., சாதனைதுண்டு பிரசுரம் வழங்கல்

இ.பி.எஸ்., சாதனைதுண்டு பிரசுரம் வழங்கல்

இ.பி.எஸ்., சாதனைதுண்டு பிரசுரம் வழங்கல்சேலம்:சேலம், அம்மாபேட்டையில் அ.தி.மு.க.,வின் சாதனைகளை, மக்களுக்கு விளக்கி எடுத்துக்கூறும்படி, திண்ணை பிரசாரம் நேற்று நடந்தது. அதில், இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க, 3 சதவீத இடஒதுக்கீடு, 52.31 லட்சம் மாணவர்களுக்கு, 7,322 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை விளக்கி கூறும்படி துண்டு பிரசுரம், வீடுதோறும் சென்று, மாவட்ட பொறுப்பாளர்களான செல்வராஜ், பாலு வழங்கினர். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன், பகுதி செயலர் யாதவமூர்த்தி, ஜெகதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை