உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்ஆத்துார்:ஆத்துார் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., மையம், ஒரு வாரத்துக்கு முன் மூடப்பட்டது. தற்போது, 'ஏ.டி.எம்., செயல்படாது' என தெரிவித்து, அதற்கான காரணம் குறித்து, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தபால் துறை அலுவலர்கள் கூறுகையில், 'ஏ.டி.எம்., மையம், அதன் கார்டு வழங்கும் பணிகளை, தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாக, பணிகளை நிறுத்தியதால், ஏ.டி.எம்., தற்காலிகமாக மூடப்பட்டது. வேறு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த பின், மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ