உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வியாபாரியை தாக்கிமொபைல் பறித்த 3 பேர் கைது

வியாபாரியை தாக்கிமொபைல் பறித்த 3 பேர் கைது

வியாபாரியை தாக்கிமொபைல் பறித்த 3 பேர் கைதுசேலம், :சேலம், அன்னதானப்பட்டி, புதிய கந்தப்பா காலனியை சேர்ந்தவர் சரவணன், 45. தள்ளுவண்டியில், 'ஸ்வீட்கான்' விற்கிறார். நேற்று முன்தினம் செவ்வாய்ப்பேட்டையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த, 3 பேர் சரவணனை தாக்கி, அவரது மொபைல் போன், 4,000 ரூபாயை பறித்துச்சென்றனர். சரவணன் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்து, கிச்சிப்பாளையம், காளிகவுண்டர்காட்டை சேர்ந்த பிரகாஷ், 32, முருகன், 31, ஆனந்த், 34, ஆகியோரை கைது செய்து, 4,000 ரூபாய், மொபைல் போனை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி