உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோவில் கைதான ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட்

போக்சோவில் கைதான ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: போக்சோவில் கைது செய்யப்பட்ட, மல்லுார் ஓவிய ஆசிரியர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 58, இவர், மல்லுார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, மாணவியரிடம் சில்மிஷம் செய்-ததாக, கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் கடந்த, 22ல், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்-தனர். இதுகுறித்த அறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அலு-வலருக்கு அனுப்பி வைத்தனர்.இதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், நேற்று ஓவிய ஆசிரியர் சீனிவாசனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.* இந்நிலையில் நேற்று, மாணவியரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டனர்.சம்பவம் குறித்து, பெற்றோர்களுக்கு உடனடியாக ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. அந்த ஆசிரியரை முன்கூட்டியே கண்கா-ணித்து, தடுக்கவில்லை. இனி இது போல் நடக்காமல், பார்த்து-கொள்ள வேண்டும் என, வாக்குவாதம் செய்தனர். ஆசிரியர்கள் உறுதி அளித்ததால், கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ