| ADDED : ஜூலை 06, 2024 06:57 AM
ஏற்காடு : ஏற்காடு, தலைச்சோலை மலைக்கிராமத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு தலைமை ஆசிரியர் உள்பட, 3 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சில ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வந்தது. கடந்த ஆண்டு, 7ம் வகுப்பில் ஒரு மாணவி, 5ம் வகுப்பில் ஒரு மாணவி என, இருவர் மட்டும் படித்தனர். இந்த ஆண்டு அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும், அவர்களது, 'டிசி'யை பெற்று, ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்தனர். இந்த ஆண்டு, புதிதாகவும் யாரும் சேரவில்லை. இதனால் மாணவர் எண்-ணிக்கை, பூஜ்யம் ஆனது.நேற்று ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவுத், வள மேற்பார்வையாளர் கனகராஜ்(பொ), அப்பள்ளியை மூட முயன்-றனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் செந்தில் பிரபு உள்ளிட்ட மக்கள், மாணவர்-களை சேர்க்க வழிவகை செய்வதாக கூறி, கல்வி அலுவலரிடம், 10 நாட்கள் அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தனர். அதற்கு சம்-மதம் தெரிவித்த கல்வி அலுவலர், தவறினால் பள்ளியை நிரந்தர-மாக மூடும் நிலை ஏற்படும் என கூறி சென்றார்.