உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலெக்டர் ஆபீசில்பிடிபட்ட பாம்பு

கலெக்டர் ஆபீசில்பிடிபட்ட பாம்பு

சேலம், : சேலம் கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களின் வாகனங்களை, கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள ஸ்டாண்டுகளில் நிறுத்துகின்றனர். அங்கு நேற்று, பாம்பு இருப்பதை பார்த்து மக்கள் அலறியடித்து ஓடினர். அவர்கள் தகவல்படி, தீயணைப்புத்துறையினர் வந்து, அதிநவீன கருவியால், பாம்பை லாவகமாக பிடித்தனர். அது, 6 அடி சாரை பாம்பு என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின் சாக்கு பையில் போட்டு கட்டி பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ