நீர் பறவை கணக்கெடுப்பு
நீர் பறவை கணக்கெடுப்புசேலம்:-சேலம் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் நீர் பறவை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. டேனிஷ்பேட்டை, காஞ்சேரி காப்புக்காட்டில், ஓங்காரராஜா ஏரி பகுதியில், சேலம் கோட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்களில் நீர் பறவை கணக்கெடுப்பு நடந்தது. இங்கு, 21 இடங்களில் நடக்க உள்ளது. முதல்கட்டமாக, 13 இடங்களில் தொடங்கியது. பூலாவாரி ஏரி பகுதியில் மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.கணக்கெடுப்பில் வனத்துறையுடன் இணைந்து பறவை ஆர்வலர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மார்ச் 9ல்(இன்று), 8 இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.