உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்

மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்

மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, சரக்கு வேனில் மணல் கடத்திய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கெங்கவல்லி அருகே, தெடாவூர் பிரிவு சாலையில் நேற்று இரவு கெங்கவல்லி போலீசார், வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'மகேந்திரா - பிக்கப்' சரக்கு வேனை நிறுத்தாமல், போலீசார் மீது மோதுவது போல் சென்றனர்.பதிவு எண் இல்லாத சரக்கு வேனை, பின் தொடர்ந்து சென்றபோது, வேனை நிறுத்தி விட்டு டிரைவர் உள்ளிட்டோர் தப்பியோடினர்.அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, ஆற்று மணல் இருந்ததும், கெங்கவல்லி வழியாக செல்லும் சுவேத நதியில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய நபர்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை