உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பதுங்கிய சாரை பாம்பு மீட்பு

பதுங்கிய சாரை பாம்பு மீட்பு

மேட்டூர், டெய்லர் தோட்டத்தில் பதுங்கியிருந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த சின்ன கோனுார் கிராமம், டெய்லர் ஆனந்தன், 50. இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு தனது வீட்டருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது, அங்கு மரத்தில் ஒரு சாரைபாம்பு பதுங்கி இருப்பதை கண்டு, மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பதுங்கி இருந்த, 6 அடி நீள சாரை பாம்பை உயிருடன் மீட்டு, மேட்டூர் சீத்தாமலையில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !