பட்டதாரி இளைஞரை கரம்பிடித்த ஆசிரியை
வாழப்பாடி, வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி சிவசக்தி நகர் தெற்கு காட்டை சேர்ந்தவர், சபரிநாதன், 24. பி.எஸ்.சி., முடித்துள்ளார்.இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தர்ஷினிதேவி, 23. எம்.காம்., முடித்துவிட்டு, கூட்டத்துப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இருவரும் காதலித்து வந்தனர். இது பெண் வீட்டாருக்கு தெரிந்து, எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நேற்று காலை, காரிப்பட்டி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.காரிப்பட்டி போலீசார், இரு வீட்டினரை அழைத்து சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.