உதவித்தொகை தேர்வில் 10,230 பேர் பங்கேற்பு
உதவித்தொகை தேர்வில் 10,230 பேர் பங்கேற்புசேலம்:அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 2 வரை மாதம், 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு தேர்வுக்கு, சேலம் மாவட்டத்தில், 4,225 மாணவர், 6,130 மாணவியர் என, 10,355 பேர் விண்ணப்பித்தனர்.நேற்று, 44 மையங்களில் தேர்வு நடந்தது. காலை, 9:30 முதல், 11:00 மணி வரை மனத்திறன், 11:30 முதல், 1:00 மணி வரை படிப்பறிவு என இரு பிரிவாக தேர்வு நடந்தது. 4,173 மாணவர், 6,057 மாணவியர் என, 10,230 பேர் எழுதினர். 52 மாணவர், 73 மாணவியர் என, 125 பேர் வரவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.